Welcome to Infoog.com Weblogs!

Now you can write and publish your own blogs by yourselves with fully accessible control for your blog entries.
Category >> Languages
Jan 16
2013

கழகத்தமிழ் வினா விடை

Posted by mohankumar in tamils , tamil-book , redindians , policy , people , negroes , mangolians , language , india , hindusm , hindus , diravidian , caucasians , books , aryan

User Rating: / 3
PoorBest 

Thunderbird

இந்நூலானது தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நூல், தமிழ் கொள்கைகளை பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற அடிப்படையில் - திருமந்திர மணி துடிசைகிழார் அ. சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் முதற் பதிப்பு 1943-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த நூல் திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப்பட்டது.

நூலில் உள்ள தகவல்கள்: தமிழ் நாடு யாது?, மக்களிடம் மாறுபாடு உண்டா?, இந்துக்கள் யார்? இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு, தமிழர்களுக்குள் வகுப்புகள் உண்டா? தமிழர்களின் மொழி என்ன? தமிழர்களின் முக்கிய கொள்கைகள் என்ன? தமிழர்களின் அறம், கொள்கைகள் ஆகியன அடங்கியுள்ளது

இந்நூலின் கருத்தக்களை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும்.


Jan 24
2012

Tamil Decimal Calculation !!!!!!!

Posted by mohankumar in world , tamil. decimal , numbers , new , maths , language , generation , computer , calculator , calculation , best

User Rating: / 4
PoorBest 

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..


 1 - ஒன்று 
3/4 - முக்கால் 
1/2 - அரை கால் 
1/4 - கால் 
1/5 - நாலுமா 
3/16 - மூன்று வீசம் 
3/20 - மூன்றுமா 
1/8 - அரைக்கால் 
1/10 - இருமா 
1/16 - மாகாணி(வீசம்) 
1/20 - ஒருமா 
3/64 - முக்கால்வீசம் 
3/80 - முக்காணி 
1/32 - அரைவீசம் 
1/40 - அரைமா 
1/64 - கால் வீசம் 
1/80 - காணி 
3/320 - அரைக்காணி முந்திரி 
1/160 - அரைக்காணி 
1/320 - முந்திரி 
1/102400 - கீழ்முந்திரி 
1/2150400 - இம்மி 
1/23654400 - மும்மி 
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001 
1/1490227200 - குணம் 
1/7451136000 - பந்தம் 
1/44706816000 - பாகம் 
1/312947712000 - விந்தம் 
1/5320111104000 - நாகவிந்தம் 
1/74481555456000 - சிந்தை 
1/489631109120000 - கதிர்முனை 
1/9585244364800000 - குரல்வளைப்படி 
1/575114661888000000 - வெள்ளம் 
1/57511466188800000000 - நுண்மணல் 
1/2323824530227200000000 - தேர்த்துகள். 

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்  



நன்றி: Jacob M B A
(
Shared by Jacob MBA)

 


Jun 02
2010

மக்கள் தொகை கணெக்கெடுப்பில் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்ய வேண்டும் - சீமான்

Posted by admin in tamizar , sensex , seeman , naamthamilar , naamtamilar , eelam , 2010

User Rating: / 6
PoorBest 

மக்கள் தொகை கணெக்கெடுப்பின் பொழுது தங்களைத் Seeman-Naamthamilarதமிழர்கள் என்று பதிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி 45 நாட்கள் நடைபெற இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கனெக்கெடுப்பில் அனைத்து தமிழர்களும் தவறாது தங்கள் இனத்தை பதிவு செய்தல் அவசியம். இனம் என்பதில் என்ன பதிவு பண்ணுவது என்ற குழப்பம் இங்கு தமிழர்களிடையே உள்ளது.




Mar 10
2010

மு கருணாநிதியும் லல்லுவும்

Posted by mohankumar in tamilnadu , rjd , railway , minister , lalluprasadh , lallu , karunanithi , kalaingar , ex , dmk , congress , cm , bihar

User Rating: / 3
PoorBest 

தமிழக முதல்வர், மேதகு தமிழ் அறிஞர், தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் வாழ்கையை அர்ப்பணித்தவர், மு கருணாநிதி (Mr.M. Karunanithi)அவர்கள், இப்படிப்பட்ட பெருமைக்குரியவரின் செயல்களில் நிறைகளை மட்டுமே காணும் நண்பர்களுக்காகவும் அன்பர்களுக்காகவும்.  (இன்று காலை செய்தி தாளை படித்தவுடன் எனக்கு தோன்றியது)
இந்தியாவின் முன்னால் தொடர்வண்டி துறை அமைச்சரும் (Ex. Railway Minister), ஏழு பெண்களுக்கு தந்தையுமான திரு லல்லு பிரசாத் யாதவ் (Mr. Lalu Prasadh Yadhav) அவர்கள் பெண்களுக்கு 33% ( முப்பத்தி மூன்று சதவீத) இடஒதுக்கீட்டை எதிர்த்தும், பிற்படுதப்ப்பட்டோருக்கும் , தலித்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது இவரின் விருப்பம் ( திரு. முலாயம் சிங்கின் விருப்பமும் கூட).

இது நன்மைக்கோ தீமைக்கோ, ஆனால் இவரின் விருப்பத்திற்கு மாறாக தனது கட்சி அங்கம் வகிக்கும் (ஆதரவு தரும்) மத்திய அரசு தீர்மான மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது, இதனால்  மத்திய அரசிற்கு (காங்கிரசிற்கு - Congress)  தான் (ராஷ்டிரிய ஜனதா தளம் - RJD)  கொடுக்கும் ஆதரவை விளக்கி கொள்ளப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.  இதில் உயிர் போகும் அளவிற்கு எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை, இந்த மசோதாவால் பெரிய  மாற்றம் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை (நிகழ்ந்தால் நன்மைக்கே) ஆனால் இந்த ஒரு மத்திய அரசின் தீர்மானத்திற்கே அவர் மத்திய அரசிடம் இருந்து ஆதரவை திரும்ப பெற்றுக்கொள்கிறார்.

ஆனால் பல லட்சக்கணக்கான தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கிய, பல லட்சம் தமிழர்கள் உயிர்கள் காவு வாங்க காரணமாய் இருந்த மத்திய (இந்தியாவை ஆளும் காங்கிரஸ்) அரசிற்கு தான் கொடுக்கும் (தி.மு.க) அதரவை விளக்கி கொள்ள தயாரில்லை, இதை கேட்கப்போனால், மத்திய அரசின் செயல்பாட்டில் (மத்திய மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் தி.மு.க.) தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது, தன்னால் கடிதம் ஒன்றை மட்டுமே எழுத முடியம் என்றார். இது வேடிக்கையான, கேவலமான ஒரு நிகழ்வு.

இங்கே இன உணர்வு மிஞ்சியதா? மாண உணர்வு மிஞ்சியதா? கொள்கையுணர்வு மிஞ்சியதா? பாச உணர்வு மிஞ்சியதா? சுயநலம் மிஞ்சியதா? 

என்னை பொறுத்தவரை தமிழனை விட பீகாரியே தைரியம் உள்ளவனாகவும், கொள்கை பிடிப்பு உள்ளவனாகவும், பதவி ஆசைக்கு அப்பாற்பட்டவனாகவும் இருக்கிறான். 

தமிழன் வீரம் இல்லாதவனாக மாற்றப்பட்டுள்ளான், சாதிபிரசினைக்காக ஆயுதம் எடுக்க துணிந்தவன், புத்தி என்னும் ஆயுதத்தை எடுக்கவும், ஒட்டு என்னும் கேடயத்தை பயன் படுத்தவும் மறந்து விட்டான், வெறும் ஐநூறு ஆயிரத்திற்காக தன் வாழ்க்கையையே துளைத்துவிடான், தன் சொந்தங்களின் சோகத்தை மறந்துவிட்டான். 

இங்கே இன உணர்வு மிஞ்சியிருந்தால், நம் சொந்தங்களை கொள்ளப்பணித்தவனுக்கு வெற்றி கிடைத்திருக்குமா?


<< Start < Prev 1 2 Next > End >>
Digitizing ,Vector Art
Organic SEO ,Web Design , Web Development